'யாத்ரா' 2-ம் பாகத்தில் நடிக்கவுள்ளதாக வெளியான செய்திக்கு, நடிகர் சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'என்.ஜி.கே'. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம், கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
’என்.ஜி.கே.’ படத்தை விளம்பரப்படுத்தும் பொருட்டு, ஹைதராபாத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் சூர்யா. அப்போது, 'யாத்ரா 2' படம் குறித்துக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்துள்ள சூர்யா, ”நானும் இந்த வதந்திகளைக் கேள்விப்பட்டேன். அதில் உண்மையில்லை.
ஜெகனுடன் எனக்கு நல்ல நட்புண்டு. அவர் தேர்தலில் ஜெயித்ததில் மகிழ்ச்சி. இதுவரை யாரும் என்னை 'யாத்ரா 2'-வுக்காக அணுகவில்லை. ஜெகன் அண்ணா வாழ்க்கையைச் சொல்லும் படத்தில், அதற்கான சரியான திரைக்கதையுடன் வந்தால், அவர் கதாபாத்திரத்தில் கண்டிப்பாக நடிக்க விருப்பம்தான்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 'யாத்ரா 2' என்ற பெயரில் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் கதையில் சூர்யா நடிக்கவுள்ளதாக செய்தி வெளியானது. அதற்கு, தன் பதிலால் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சூர்யா.
மேலும், மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி சென்ற பாதயாத்திரையை மையப்படுத்தி 'யாத்ரா' என்ற படம் வெளியானது. அதில், மம்மூட்டி நடித்திருந்தார். இப்படம், கடந்த பிப்ரவரி 8-ம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
47 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago