மோகன்லால் இயக்கும் படத்துக்கு இசையமைக்கும் லிடியன்

By செய்திப்பிரிவு

நடிகர் மோகன்லால் இயக்கவுள்ள பரோஸ் என்ற படத்துக்கு இசையமைக்க லிடியன் நாதஸ்வரம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம், 12 வயது பியானோ வித்தகர். தி வேர்ட்ஸ் பெஸ்ட் என்ற சர்வதேச தொலைக்காட்சி நிகழ்ச்சியில் போட்டியிட்டு, இறுதிப்போட்டியில் ஒரு மில்லியன் டாலர்களை வென்று கவனம் ஈர்த்தவர்.

இவர் இந்தியா திரும்பியவுடன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானே இவருக்கு பாராட்டு விழா நடத்தினார். அந்த விழாவில், லிடியன் என்னுடன் சேர்ந்து பணியாற்றுவதை விட தானாக பல உச்சங்களைத் தொடுவதுதான் தன் விருப்பம் என்று ரஹ்மான் கூறியிருந்தார்.

தற்போது அவர் சொன்னதற்கு பொருத்தமாக, நடிகர் மோகன்லால் இயக்கும் மலையாளப் படமான பரோஸுக்கு லிடியன் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

குழந்தைகள் படமான இது போர்த்துகீசிய இதிகாச கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது. இது வாஸ்கோ ட காமாவின் கதையோடும் தொடர்பு கொண்டது. இந்தியாவின் முதல் 3டி படமான மை டியர் குட்டிச்சாத்தான் படத்தை எழுதிய ஜிஜோ புன்னூஸ் இந்தப் படத்தின் கதையை எழுதியுள்ளார்.

அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது. பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படம் போர்ஜுகல், கோவா உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்படும் என்று தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்