என்னைக் கொன்றாலும் லட்சுமி என்.டி.ஆர் யு-டியூப்பில் வெளியாகும்: இயக்குநர் ராம் கோபால் வர்மா

By ஸ்கிரீனன்

என்னைக் கொன்றாலும் 'லட்சுமி என்.டி.ஆர்' யு-டியூப்பில் வெளியாகும் என்று இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்

மறைந்த ஆந்திர முதல்வரும், பழம்பெரும் நடிகருமான என்.டி.ராமாராவின் பயோபிக் (உண்மைக்கதை) சமீபத்தில் ஆந்திரா, தெலங்கானா மட்டுமின்றி, உலகமெங்கும் வெளியானது. க்ரிஷ் இயக்கத்தில் பாலகிருஷ்ணா, வித்யா பாலன், ராணா, சுமந்த், கல்யாண் ராம், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் விமர்சன ரீதியாக மட்டுமே வரவேற்பைப் பெற்றது.

வசூல் ரீதியாக சோபிக்கவில்லை. தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் படக்குழுவினருக்குp பாராட்டு தெரிவித்தார்கள். இப்படம் தொடங்கப்பட்டதிலிருந்து, வெளியானது வரை கடுமையாக விமர்சித்து வருகிறார் இயக்குநர் ராம் கோபால் வர்மா.

இந்நிலையில் 'லட்சுமி என்.டி.ஆர்' என்ற பெயரில் ராம் கோபால் வர்மாவும் என்.டி.ஆர் பயோபிக்கை இயக்கியுள்ளார். இப்படம் மார்ச் 22-ம் தேதி வெளியாகவுள்ளது. இதில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சித்து படமாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் இப்படம் எவ்வித பிரச்சினையுமின்றி வெளியாகுமா என்பதில் சந்தேகம் நீடித்து வருகிறது. இது தொடர்பாக ராம் கோபால் வர்மா “யாராவது திரைப்பட வெளியீட்டை நிறுத்த நினைத்தால், அவர்கள் முதலில் என்னைக் கொல்ல வேண்டும். அப்படி அவர்கள் என்னைக் கொன்றாலும் 'லட்சுமி என்.டி.ஆர்' யு-டியூப்பில் வெளியாகும். ஏற்கனவே இது பற்றி குறிப்பிட்டு உயில் எழுதிவிட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்