இயக்குநருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது புதிய படம் ட்ராப் ஆனதாகத் தெரிவித்துள்ளார் மகேஷ் பாபு.
மகேஷ் பாபு நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘பரத் அனே நேனு’. கொரட்டலா சிவா இயக்கிய இந்தப் படத்தில், ஹீரோயினாக கியாரா அத்வானி நடித்தார். பிரகாஷ் ராஜ், சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்தார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, ‘ரங்கஸ்தலம்’ படத்தை இயக்கிய சுகுமார் இயக்கத்தில் நடித்து வந்தார் மகேஷ் பாபு. மைதிலி மூவிஸ் தயாரித்த இந்தப் படம், மகேஷ் பாபுவின் 26-வது படம் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், திடீரென இந்தப் படம் ட்ராப் ஆனதாக அறிவித்துள்ளார் மகேஷ் பாபு. இயக்குநருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ட்ராப் ஆனதாக அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
“கருத்து வேறுபாட்டால் இயக்குநர் சுகுமாருடனான திரைப்படம் கைவிடப்பட்டுள்ளது. அவரது புதிய படத்துக்கு எனது வாழ்த்துகள். மிகச்சிறந்த இயக்குநரான அவரின் மீது எப்போதும் மரியாதை இருக்கும். ‘1 நேனொக்கடினே’ எப்போதும் ஒரு அற்புதப் படைப்பாக இருக்கும். அந்தப் படத்தில் உழைத்த ஒவ்வொரு தருணத்தையும் ரசித்தேன்” என ட்வீட் செய்துள்ளார் மகேஷ் பாபு.
இந்தப் படம் ட்ராப் ஆனதால், ‘எஃப் 2’ படத்தை இயக்கிய அனில் ரவிபுடி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
13 mins ago
சினிமா
26 mins ago
சினிமா
37 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago