30 வயதுக்குள் சாதித்த 30 நபர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ளது. இதில் ஒரேயொரு நடிகர் மட்டுமே இடம்பெற்றுள்ளார். 'அர்ஜூன் ரெட்டி' படத்தின் மூலம் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா மட்டுமே திரைத்துறையில் இருந்து தேர்வாகி உள்ளார்.
இவருடன் யூடியூபில் நடித்துப் பிரபலமான பிரஜக்தா கோலி, கிரிக்கெட்டர் ஸ்மிரிதி மந்தனா, விளையாட்டு வீரர்கள் ஹிமா தாஸ் மற்றும் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.
தொழில்துறை, உற்பத்தி மற்றும் ஆற்றல், விளம்பரத் துறை, வர்த்தகம், ஊடகம், விவசாயம் உள்ளிட்ட 16 துறைகளில் இருந்து சாதனை மனிதர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
ஐஐடியில் படித்த தொழில்முனைவோர்கள் வசந்த் காமத், அனுராக் ஸ்ரீவத்சவா, ரோஹன் குப்தா ஆகியோர் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் 30 நபர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். விவசாயத்தைப் பொருத்தவரையில் விவசாயிகளிடம் இருந்து பொருட்களை நேரடியாக வாங்கி ஃப்ரெஷ்ஷான பழங்கள் மற்றும் காய்கறிகளை வழங்கும் நிஞ்சாகார்ட் நிறுவனத்தின் கார்த்தீஸ்வரன் கேகே, சரத் லோகநாதன் மற்றும் அஷுதோஸ் விக்ரம் ஆகியோர் பட்டியலில் உள்ளனர்.
கிராமப்புற கைவினைக் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதியளிக்கும் மனீத் கோஹில், சன்சித் கோவில் மற்றும் அல்பின் ஜோஸ் உள்ளிட்ட பலர் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
இதற்காக 16 பிரிவுகளில் இருந்து 300 நபர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. அவற்றில் இருந்து நிபுணர்களின் உதவியோடு 175 பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவற்றில் இருந்து 30 பேர் இறுதி செய்யப்பட்டதாக ஃபோர்ப்ஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
23 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago