மூத்த தெலுங்குப்பட இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா காலமானார்

By செய்திப்பிரிவு

தெலுங்கு திரை உலகின் பிரபல மூத்த இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா காலமானார். அவருக்கு வயது 70, கடந்த சில தினங்களாக உடல் நலக்கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் உயிர் பிரிந்தது.

 

சுமார் 37 ஆண்டுகள் தெலுங்கு திரை உலகில் கொடிகட்டிப் பறந்த கோடி ராமகிருஷ்ணா சுமார் 202 படங்களை இயக்கியுள்ளார். இந்த வெற்றி இயக்குநரின் மறைவையொட்டி தெலுங்கு திரையுலகம் துக்கத்தில் ஆழ்ந்துள்ளது.

 

மேற்கு கோதாவரி மாவட்டம் பாலக்கொல்லுவில் பிறந்த கோடி ராமகிருஷ்ணா தமிழ், இந்தி, கன்னட மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ளார்.

 

நடிகர் மகேஷ் பாபு தன் ட்விட்டரில், “இயக்குநர் கோடி ராமகிருஷ்ணாவின் மறைவினால் கடும் துயருற்றேன். தெலுங்கு சினிமாவுக்கு இவரது பங்களிப்பு ஈடு இணையற்றது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

 

தனது திரைப்பட இயக்குநர் வாழ்க்கையை 1982-ல் பெரிய ஹிட்டுடன் தொடங்கினார் கோடி ராமகிருஷ்ணா,  ‘இண்ட்லோ ராமையா வீடிலோ கிருஷ்ணய்யா’ திரைப்படம் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் எழுச்சிக்கு வித்திட்டது. கொல்லப்புடி மாருதி ராவின் ஸ்க்ரிப்டில் மெகா ஹிட்டான இந்தப் படம் பல மொழிகளில் ரீமேக் ஆனது. இந்தியில் ரீமேக்கான இந்தப் படத்தில் கோவிந்தா ஹீரோவாக நடித்தார்.

 

இந்தப் படத்துக்கு அடுத்த 2 ஆண்டுகளில் 1984-ல் நந்தமுரி பாலகிருஷ்ணா லீட் ரோலில் நடிக்க வெளிவந்த ‘மங்கம்மா காரி மணவாடு’ படம் பெரிய ஹிட் ஆனது. இருவரும் சேர்ந்து மேலும் பல ஹிட் திரைப்படங்களைக் கொடுத்தனர்.

 

2009-ல் மிகப்பெரிய ஹிட் திரைப்படமான அருந்ததியைத் தந்தவர் கோடி ராமகிருஷ்ணா. அனுஷ்கா இதன் மூலம் பெரிய நட்சத்திர அந்தஸ்தை எட்டினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்