தெலுங்கு இயக்குநர் பாபு மரணம்

By செய்திப்பிரிவு

பிரபல தெலுங்கு சினிமா இயக்குநர் பாபு (வயது 81) மாரடைப்பால் மரணமடைந்தார்.

1933-ம் ஆண்டு பிறந்த பாபுவின் இயற்பெயர் சத்திராஜு லக்ஷ்மி நாராயணா. திரையுலகில் இவரை அனைவரும் பாபு என்று அழைத்தனர். பாலகிருஷ்ணா, நயன்தாரா ஆகியோரின் நடிப் பில் சமீபத்தில் வெளியான ‘ஸ்ரீராம ராஜ்யம்’உட்பட 51 படங்களை அவர் இயக்கியுள்ளார். 2013-ம் ஆண்டில் பத்மஸ்ரீவிருது, ஆந்திர பல்கலைக்கழகம் வழங்கிய கலா பிரபூர்ணா விருது உட்பட பல விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

என்.டி.ராமாராவ், சிரஞ்சீவி, நாகேஷ்வர ராவ், அனில்கபூர், ஸ்ரீகாந்த் உட்பட பல முன்னணி நடிகர்களை இயக்கிய பாபு, தமிழில் ‘நீதி தேவன் மயங்குகிறான்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

உடல்நலக் குறைவு காரண மாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த அவர் ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பால் காலமானார். இவருக்கு பானுமதி என்ற மகளும், வேணுகோபால், வெங்கட்ரமணன் என்ற 2 மகன்களும் உள்ளனர். அவரது மறைவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

மேலும்