திலீப் - காவ்யா மாதவனுக்குப் பெண் குழந்தை பிறந்தது

மலையாள நடிகர்களான திலீப் - காவ்யா மாதவனுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.

மலையாள நடிகரான திலீப், நடிகை மஞ்சு வாரியரை 1998-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2000-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்கு மீனாட்சி எனப் பெயரிட்டனர். அதன் பின்னர் திலீப் - மஞ்சு வாரியர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.இதனால், 2015-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.

அதன்பின்னர், காவ்யா மாதவனை 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார் திலீப். இந்நிலையில், திலீப் - காவ்யா மாதவனுக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது.

கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இன்று (அக்டோபர் 19) அதிகாலை 4.45 மணிக்குக் குழந்தை பிறந்திருப்பதாக முகநூலில் தெரிவித்துள்ளார் திலீப்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE