மம்மூட்டி, மோகன்லாலுடன் நடிக்கிறார் நயன்தாரா!

By செய்திப்பிரிவு

தமிழில், கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, 36 வயதினிலே ஆகிய படங்களில் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியவர் மகேஷ் நாராயணன். சி யூ சூன், மாலிக் ஆகிய மலையாளப் படங்களை இயக்கியுள்ள இவர், அடுத்து இயக்கும் படத்தில் மம்மூட்டி, மோகன்லால், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில் நடிக்கின்றனர். மம்மூட்டியும் மோகன்லாலும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பில் இணைந்த நயன்தாராவை வரவேற்கும் விதமான வீடியோ ஒன்றைத் தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப் வெளியிட்டுள்ளார். அதில் படப்பிடிப்பு இடைவேளையில் நயன்தாராவும் மம்மூட்டியும் பேசிக்கொண்டிருக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

நயன்தாரா ஏற்கெனவே ராப்பகல், பாஸ்கர் த ராஸ்கல், புதிய நியமம் உள்ளிட்ட படங்களில் மம்மூட்டியுடன் நடித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

மேலும்