'தண்டேல்' படக்குழுவினருக்கும், மகன் நாக சைதன்யாவுக்கும் நாகர்ஜுனா புகழாரம்!

By ஸ்டார்க்கர்

‘தண்டேல்’ பார்த்துவிட்டு படக்குழுவினருக்கும், மகன் நாக சைதன்யாவுக்கும் புகழாரம் சூட்டியிருக்கிறார் நாகார்ஜுனா.

சந்து மொண்டட்டி இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தண்டேல்’. இப்படத்துக்கு தெலுங்கில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 3 நாட்களில் உலகளவில் 60 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது. தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இப்படத்தினைப் பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது ‘தண்டேல்’ பார்த்துவிட்டு நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜுனா, “பிரியமான மகன் நாக சைதன்யா உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன். பல்வேறு சவால்களை எதிர்கொண்டு கலைக்கு உனது அர்ப்பணிப்பை காண்கிறேன். ‘தண்டேல்’ ஒரு சாதாரண படமல்ல. உனது ஆற்றலற்ற ஆர்வத்திற்கும், பெரிய கனவுகளை காணும் துணிவுக்கும், உன் கடுமையான உழைப்புக்கும் ஒரு சாட்சி.

அக்கினேனி ரசிகர்களுக்கு, நீங்கள் எங்களுடன் குடும்பமாக இருந்து வெற்றியில் பங்கு பெற்றுள்ளீர்கள். ‘தண்டேல்’ படத்தின் வெற்றி உங்களுடையதும் கூட. உங்கள் முடிவில்லாத அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.

அல்லு அரவிந்த் மற்றும் பன்னி ஆகியோருக்கு பெரிய நன்றி. அற்புதமான திறமை கொண்ட சாய் பல்லவி, இனிய திறமைமிக்க தேவி ஸ்ரீபிரசாத், புது நட்சத்திர இயக்குநர் சந்து மொண்டட்டி மற்றும் அற்புதமான ‘தண்டேல்’ படக்குழு அனைவருக்கும் இந்த தருணத்தை மாற்ற முடியாதவையாக ஆக்கியதற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்