“இது என் வாழ்க்கையில் மட்டும் நடந்தது போன்று ஏன் ஒரு குற்றவாளியாக கருதப்படுகிறேன்” என்று சமந்தா உடனான விவகாரத்து குறித்து பேசியிருக்கிறார் நாக சைதன்யா.
சந்து மொண்டட்டி இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தண்டேல்’. இப்படத்துக்கு தெலுங்கில் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
‘தண்டேல்’ படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியொன்றில் சமந்தாவுடனான விவாகரத்து குறித்து பேசியிருக்கிறார் நாக சைதன்யா. அதில் “நாங்கள் தனிப்பட்ட வழிகளில் செல்ல வேண்டும் என நினைத்தோம். எங்களது தனிப்பட்ட காரணங்களுக்காக அந்த முடிவை எடுத்தோம். மேலும், ஒருவருக்கொருவர் மீது மரியாதை வைத்துள்ளோம். நாங்கள் எங்களுடைய வாழ்க்கை வழியில் அடுத்த படிக்கு செல்கிறோம். இதை பற்றி என்ன விளக்கம் தேவைப்படுகிறது என்று புரியவில்லை. நான் பார்வையாளர்கள், ஊடகங்கள் உள்ளிட்ட அனைவரும் அதை மதிப்புடன் எடுத்துக் கொள்வார்கள் என நினைத்தேன்.
நாங்கள் தனிமையை கேட்டோம். இந்த விவகாரத்தில் தனிமையை கொடுங்கள் என்றோம். ஆனால், வருந்தத்தக்க வகையில் அது தலைப்பாக மாறியது. கிசு,கிசு செய்தியாகவும் ஆக்கப்பட்டது. அது ஒரு பொழுதுபோக்காகவும் மாறியது. நானும், சமந்தாவும் கடந்து சென்று எங்களுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருந்தோம். அப்போது நான் மீண்டும் காதல் கொண்டேன். இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். மேலும், ஒருவர் மீது ஒருவர் நிறைய மரியாதை வைத்திருக்கிறோம்.
இது என் வாழ்க்கையில் மட்டும் நடந்தது போன்று ஏன் ஒரு குற்றவாளியாக கருதப்படுகிறேன்? திருமண உறவில் இருக்கும்போது மிகவும் சிந்தித்து, பெரும் மரியாதையுடன் பிரியும் முடிவை எடுத்தேன். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் எனக்கு இது ரொம்பவே சென்சிடிவ் ஆன விஷயம். ஏனென்றால், நான் உடைந்த குடும்பத்தில் இருந்து வந்தவன். ஆகையால் அந்த அனுபவத்தை நன்றாகவே அறிவேன். ஓர் உறவை பிரியும் முன் 1000 முறை யோசிப்பேன்.
ஏனென்றால் அதன் விளைவுகளை அறிவேன். அது ஒரு பரஸ்பர முடிவாக இருக்க வேண்டும். இருவருமே பரஸ்பரம் பேசி தான் முடிவு செய்தோம். ஒரே இரவில் அந்த முடிவினை எடுக்கவில்லை. ஒவ்வொரு விஷயத்துக்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கின்றன. நமக்கான விஷயங்களை, பாதையினை சரியான முறையில் உருவாக்க வேண்டும். அது எனக்கு நடந்தது என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் நாக சைதன்யா.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago