இன்ஃப்ராரெட் கேமரா தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்ட ‘கேம் சேஞ்சர்’ பட பாடல் நீக்கம்!

By ஸ்டார்க்கர்

‘கேம் சேஞ்சர்’படத்திலிருந்து #Lyraanaa பாடலை படக்குழுவினர் நீக்கிவிட்டனர். இதற்கான காரணத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘கேம் சேஞ்சர்’ படத்தில் இன்ஃப்ராரெட் கேமரா தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்ட பாடல் Lyraanaa. இப்பாடல் குறித்து விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் இயக்குநர் ஷங்கர், தமன் உள்ளிட்ட அனைவருமே மிகவும் பெருமையாக பேசினார்கள். உலகளவில் ஒரு பாடலுக்கு அந்த கேமரா தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது ‘கேம் சேஞ்சர்’ படத்தில் தான் என்று குறிப்பிட்டார்கள்.

தற்போது ‘கேம் சேஞ்சர்’ படத்திலிருந்து அப்பாடல் நீக்கப்பட்டுள்ளது. அது குறித்து படக்குழுவினர், “’கேம் சேஞ்சர்’ படத்திலிருந்து Lyraanaa பாடலை தொழில்நுட்பக் காரணத்தினால் நீக்கிவிட்டோம். இன்ஃப்ரா ரெட் காட்சிகளை சேர்க்கும் போது தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டது. மீண்டும் அப்பாடலைச் சேர்க்க பணிபுரிந்து வருகிறோம். ஜனவரி 14-ம் தேதி முதல் அப்பாடல் படத்தில் இணைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்கள்.

ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தில் ராம்சரண், எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், கைரா அத்வானி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ள இப்படத்தினை தில் ராஜு தயாரித்துள்ளார். தமிழகத்தில் இப்படத்தினை ராக்போர்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

19 mins ago

சினிமா

53 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்