திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் உயிரிழப்பை முன்வைத்து, ‘தாகு மஹாராஜ்’ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். இதில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இதனை முன்னிட்டு இன்று நடைபெற இருந்த ‘தாகு மஹாராஜ்’ படத்தின் விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை பிரம்மாண்டமாக நடத்த பல்வேறு ஏற்பாடுகளை படக்குழு செய்து வந்தது. ஆனால், இந்த தருணத்தில் இப்படியொரு விழா வேண்டாம் என்று ரத்து செய்யப்பட்டுவிட்டது.
பாபி இயக்கத்தில் பாலகிருஷ்ணா, பாபி தியோல், பிரக்யா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நாக வம்சி தயாரித்துள்ள இப்படத்துக்கு தமன் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். ஜனவரி 12-ம் தேதி உலகமெங்கும் இப்படம் வெளியாகவுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
24 mins ago
சினிமா
32 mins ago
சினிமா
49 mins ago
சினிமா
43 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago