சிரஞ்சீவியால் மட்டுமே சினிமா மீதான தாகம் வளர்ந்ததாக இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடிலா தெரிவித்துள்ளார்.
‘தசரா’ படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடிலா தீவிரமான சிரஞ்சீவி ரசிகர். இதனை பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். அவரே தற்போது சிரஞ்சீவி படமொன்றை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இது குறித்த அறிவிப்பு வெளியாகி சில மாதங்கள் ஆகிறது.
தற்போது சிரஞ்சீவியை இயக்கவிருப்பது குறித்து பேட்டியொன்றில் பேசியிருக்கிறார் ஸ்ரீகாந்த் ஓடிலா. அதில், “நான் சிரஞ்சீவியின் திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்தவன். அவரோடு பணிபுரிகிறேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும்.
சிரஞ்சீவியை வழக்கமான பாணியில் அவரைப் பார்க்க மாட்டீர்கள். புதிய, அவரது வயதுக்கு ஏற்ற ஒரு கதாபாத்திரத்தில் நீங்கள் அவரைப் பார்ப்பீர்கள். என் மாமா என்னை சிரஞ்சீவியின் திரைப்படத்துக்கு மட்டுமே அழைத்துச் செல்வார். சிரஞ்சீவியால் தான் சினிமா மீதான தாகம் எனக்குள் வளர்ந்தது. இவ்வளவு சொன்னாலும், அவர் கேராவேனை விட்டு வெளியே வரும் வரை மட்டுமே நான் அவரது ரசிகன். வெளியே வந்துவிட்டால் அவர் எனது திரைப்படத்தின் ஒரு கதாபாத்திரமாகவே தெரிவார்.
» தனுஷின் ‘இட்லி கடை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
» பின்வாங்கிய ‘விடாமுயற்சி’யால் பொங்கலுக்கு அணிவகுக்கும் படங்கள்!
48 மணி நேரங்களுக்குள் இந்தக் கதையை நாங்கள் இறுதி செய்தோம். சிரஞ்சீவி அவர்களின் உற்சாகம் எங்களுக்கு ஊக்கம் தருவதாக இருக்கிறது. இந்த அத்தனை விஷயங்கள் நடக்கும்போதும் நான் ஏதோ கனவில் மிதப்பதைப் போல உணர்ந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
‘தசரா’ படத்துக்குப் பிறகு நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தை இயக்கவுள்ளார். அதற்குப் பிறகு சிரஞ்சீவி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் ஸ்ரீகாந்த் ஓடிலா.
முக்கிய செய்திகள்
சினிமா
10 mins ago
சினிமா
21 mins ago
சினிமா
27 mins ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago