கிச்சா சுதீப் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘மேக்ஸ்’. விஜய் கார்த்திகேயா இயக்கியுள்ள இந்தப் படத்தைத் தனது வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இதில் வரலட்சுமி சரத்குமார், சம்யுக்தா ஹொரநாட், ஆடுகளம் நரேன், சுனில் உட்பட பலர் நடித்துள்ளனர். அஜனீஸ் லோக்நாத் இசை அமைத்துள்ள இந்தப் படம் கன்னடத்தில் நேற்று வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கில் நாளை (டிச.27) வெளியாக இருக்கிறது.
முன்னதாக, இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. கிச்சா சுதீப், இயக்குநர்கள் மிஷ்கின், ராஜ்குமார் பெரியசாமி, தேசிங் பெரியசாமி, இந்திய திரைப்பட சம்மேளனத் தலைவர் ரவி கொட்டாரக்கரா மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். விழாவில் நடிகர் சுதீப் பேசும்போது கூறியதாவது:
இந்தப் படம் ஆரம்பிக்கும் முன், தயாரிப்பாளர் தாணு சார், ‘தம்பி ஒரு கதை கேளுங்கள்’ என்றார். ‘இயக்குநரை வரச் சொல்லுங்கள்’ என்றேன். நான் ஏதாவது ஃபேமிலி டிராமா கதையாக இருக்கும் என்று நினைத்தேன். இயக்குநர் விஜய் கார்த்திகேயாவின் தோற்றத்தைப் பார்த்ததும் நான் நினைத்தது உறுதியானது. ஆனால், அவர் கதை சொன்னார். கேட்டதும் தோற்றத்தைப் பார்த்து எடை போடக்கூடாது என்று புரிந்து கொண்டேன். அவரது, பார்வைதான் இந்தப் படத்தில் நான் நடிப்பதற்குக் காரணம். இந்தப் படம் மூலம் தாணு சார் கன்னட சினிமாவுக்கு வந்திருக்கிறார். அவரை வரவேற்கிறேன். தொடர்ந்து அங்கு படம் தயாரியுங்கள்.
‘காக்க காக்க’ படம் வந்தபோது நான் சென்னையில் இருந்தேன். அப்போது நான் வளர்ந்து வரும் நேரம். அந்தப் படத்தைக் கன்னடத்தில் பண்ணலாம் என்று அவரிடம் உரிமை கேட்டேன். என்னை யார் என்று தெரியாமலேயே உடனடியாக எழுதிக் கொடுத்தார். பிறகு அதை நான் பண்ண முடியாமல் போனது என்பது வேறு விஷயம். கேட்டதும் கொடுத்த தாணு சாரின் அந்த குணம் பெரிய விஷயம்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago