ஹைதராபாத்: கிரிக்கெட்டுக்கு சச்சின் எப்படியோ சினிமாவுக்கு ஷங்கர் அப்படி. அவர் தான் நம்பர் ஒன் கமர்ஷியல் இயக்குநர் என்று ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் ராம்சரண் தெரிவித்தார்.
ஷங்கர் இயக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி அமெரிக்காவின் டல்லாஸ் நகரத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் ராம்சரண் பேசியதாவது: “நாங்கள் இந்தியாவிலேயே இருப்பது போன்ற உணர்வு இது. ஒருவேளை அதனால்தான் டல்லாஸ் இப்போது டல்லாஸ்புரம் என்று அழைக்கப்படுகிறது என்று நினைக்கிறேன். ஷங்கர் இயக்கும் படத்தில் நான் நடித்ததை என்னால் நம்ப முடியவில்லை. அவர் படத்தில் நடிப்பது என்பது என்னுடைய கனவு. நான் அவருடன் இணைந்து பணியாற்றுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. இது ஒரு அழகான பயணம். கிரிக்கெட்டுக்கு சச்சின் எப்படியோ சினிமாவுக்கு ஷங்கர். அவர் தான் நம்பர் ஒன் கமர்ஷியல் இயக்குநர். கடந்த 5 ஆண்டுகளில் இது என்னுடைய முதல் தனி திரைப்படம்” இவ்வாறு ராம்சரண் தெரிவித்தார்.
இயக்குநர் ஷங்கர் பேசும்போது "எனது பாணியில் தனித்துவமான கதையுடன் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்று நான் எப்போதும் விரும்பினேன். அதன் விளைவுதான் ‘கேம் சேஞ்சர்’. கடந்த 30 ஆண்டுகளாக நான் நேரடி தெலுங்கு படம் எடுக்கவில்லை என்றாலும், தெலுங்கு ரசிகர்கள் எப்போதும் என் மீது பெரும் அன்பு செலுத்தினர். நான் முன்பு சிரஞ்சீவி, மகேஷ் பாபி, பிரபாஸ் உள்ளிட்ட மற்ற ஹீரோக்களுடன் பணிபுரியலாம் என்று நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை ராம்சரணுடன் தெலுங்கில் அறிமுகமானதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி" என்றார்.
ஷங்கர் இயக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார், இவருடன் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சுனில், சமுத்திரக்கனி மற்றும் ஜெயராம் ஆகிய முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இதன் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். எஸ் தமன் இசையமைத்துள்ளார், எஸ்.திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம், ஜனவரி 10 அன்று தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago