பட்ஜெட் உச்சவரம்புகளை உடைக்கும் 3 கன்னடத் திரைப்படங்கள்

By முரளிதர கஜானே

கன்னடத் திரைப்படங்களின் 85 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவுக்கு பட்ஜெட் உச்ச வரம்புகளை உடைக்கும் 3 திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. அடுத்த சில மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த 3 படங்களின் மொத்த பட்ஜெட் ரூ.150 கோடியையும் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 3 படங்களின் வசூல் பொறுத்து கன்னட திரையுலகமும் பெரிய பட்ஜெட் படங்களுக்குத் தயாராகவிருக்கிறது.

கடந்த ஆண்டு கன்னட மொழியில் 200-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின, இதன் வர்த்தகம் சுமார் ரூ.500 கோடிக்கும் மேல் சென்றதாக கன்னட திரைப்பட வர்த்தகக் கழகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் பெரிய பட்ஜெட் படங்களான குருஷேத்ரா, தி வில்லன், கேஜிஎஃப் ஆகிய படங்களில் மிகப்பெரிய கன்னட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஆகவே இதன் மீது திரைத்துறையினரின் எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

“முன்பெல்லாம் ரூ.25 லட்சத்துக்கு ஒரு படம் எடுத்துக் கொண்டிருந்தனர். இப்போது உயர் பட்ஜெட் படங்கள் ட்ரெண்டாகி வருகிறது. திரைப்படங்களின் எண்ணிக்கையும் கூடுவது போல் கன்னடப் படங்களின் தரம், உள்ளடக்கம் ஆகியவை கர்நாடகாவையும் கடந்து வரவேற்படைகின்றன” என்று கன்னட திரைப்பட வர்த்தகக் கழகத்தின் தலைவர் சின்னே கவுடா தெரிவித்தார்.

குருஷேத்ரா படம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. முனிரத்னாவினால் தயாரிக்கப்படுகிறது. இந்தப் படம் மஹாபாரதம் படத்தை துரியோதனின் பார்வையில் பேசும் படமாகும். இதன் பட்ஜெட் ரூ.50 கோடியைத் தாண்டும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்தாலும் “நான் எந்த ஒரு வரம்பையும் நிர்ணயிக்கவில்லை, இது என்னுடைய கனவுத்திரைப்படமாகும் திரைக்கதையையும் தயாரிக்க உதவும் தொகையைப் பொறுத்தும் பட்ஜெட் உயரவும் வாய்ப்பிருக்கிறது” என்கிறார் முனிரத்னா.

குருஷேத்ரா படத்தின் ஆடியோ ஆகஸ்டில் வெளியாகிறது, படம் செப்டம்பரில் வெளியாகலாம் என்று இயக்குநர் நாகண்ணா கூறுகிறார்.

புராணப்படமான இதில் முக்கிய நட்சத்திரங்களான அம்பரீஷ், வி.ரவிச்சந்திரன், அர்ஜுன் சர்ஜா, ஸ்னேஹா, மேகனா ராஜ், பாரதி விஷ்ணுவர்தன், முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் கவுடா, சோனு சூட், ஷஷி குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அந்தக் காலக்கட்டத்தை பிரதிபலிக்கும் மிகப்பெரிய செட்கள் 100 நாட்களுக்குப் போடப்பட்டுள்ளன என்கிறார் இயக்குநர் நாகண்ணா. இந்தியில் இந்தப் படத்துக்கான டப்பிங் உரிமைகளைப் பெற்றுள்ளது.

இன்னொரு பெரிய பட்ஜெட் படமான வில்லனை இயக்குபவர் பிரேம், இவர் இயக்கிய ஜோகி பெரிய ஹிட் ஆனது. வில்லன் படத்தைத் தயாரிப்பவர் மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சி எம்.எல்.சி. சி.ஆர். மனோகர் ஆவார். இதில் ஷிவ்ராஜ்குமார் மற்றும் சுதீப் ஆகிய இரு பெரும் நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ஏமி ஜாக்சன் இந்தப் படம் மூலம் கன்னடப் படங்களில் அடியெடுத்து வைக்கிறார். இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி மிக முக்கியமான பாத்திரம் ஒன்றை ஏற்று நடிக்கிறார். இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ.55 கோடி அல்லது அதற்கு மேல் இருக்கலாம் என்று தெரிகிறது, இந்தப் படம் ஆகஸ்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னொரு பெரிய பட்ஜெட் படமான கேஜிஎப் படத்தின் நாயகன் யாஷ். இதன் பட்ஜெட் ரூ.45 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தயாரிப்பாளர்களில் ஒருவரான கார்த்திக் ஹம்பாலே இந்த ஆண்டு இறுதியில் கேஜிஎப் வெளியாகும் என்கிறார். இப்படத்தின் டீசர் வெளியாகி சமீபத்தில் 20 லட்சம் ஹிட்கள் கண்டது.

இயக்குநர் பிரஷாந்த் நீல் இது பற்றி கூறும்போது, கேஜிஎப் நிழலுலகம் பற்றிய கதையாகும் இது. 70களில் நடைபெறும் ஒரு கதைக்களமாகும் இது. இது மிக நீளமான படம் என்பதால் இரண்டு பாகங்களாக வெளியாக வாய்ப்புள்ளது என்கிறார் இயக்குநர் நீல்.

இந்த 3 படங்களும் குறைந்த பட்ஜெட்டில் இயங்கும் திரைத்துறை கன்னட திரைத்துறை என்ற பெயரை மாற்றியமைக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். எதிர்கால பெரிய பட்ஜெட் படத்திற்கான ஆர்வத்தை இந்த படங்கள் தூண்டும் என்று கருதப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்