“ஸ்ரீவள்ளி வெறும் கதாபாத்திரம் அல்ல” - ராஷ்மிகா மந்தனா நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம், ரூ.600 கோடி வசூலைக்கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. சுகுமார் இயக்கிய இந்தப் படத்தில் ராஷ்மிகா, ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் அவர் நடிப்பும் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதன் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ராஷ்மிகா, அந்த கதாபாத்திரம் பற்றி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதில், “ஸ்ரீவள்ளிக்கு நீங்கள் கொடுத்த வரவேற்பு சிறப்பு வாய்ந்தது. அவள் என் 2-வது அடை யாளமாகிவிட்டாள். எனது திரைப்பயணத்தில் இப்போது நான் இருக்கும் இடத்தைத் தந்தது ஸ்ரீவள்ளிதான். இதற்காக இயக்குநர் சுகுமாருக்கு கடமைப்பட்டிருக்கிறேன். இதை சாத்தியமாக்கிய மேதை அவர்.

புஷ்பா இல்லாமல் ஸ்ரீவள்ளி இல்லை. அதற்காக அல்லு அர்ஜுனுக்கு நன்றி. என்னைப் பொறுத்தவரை ஸ்ரீவள்ளி வெறும் கதாபாத்திரம் அல்ல; அவரை உண்மையாக உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

மேலும்