நடிகர் மோகன்பாபு மீது மகன் மனோஜ் புகார்?

By செய்திப்பிரிவு

பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவுக்கு, விஷ்ணு மன்சு, மனோஜ் மன்சு என்ற 2 மகன்களும் லட்சுமி மஞ்சு என்ற மகளும் உள்ளனர். இவர்களும் சினிமாவில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் சொத்து பிரச்சினை காரணமாக மனோஜ் தன்னைத் தாக்கியதாக ஹைதராபாத் பஹாடி ஷெரிஃப் போலீஸில் மோகன்பாபு புகார் அளித்தார் என்று கூறப்பட்டது.. இந்நிலையில் நடிகர் மனோஜ், 100-க்கு போன் செய்து தன்னையும் தனது மனைவியையும் மோகன்பாபு தாக்கியதாக, ரத்தக்காயத்துடன் நேற்று புகார் கொடுத்ததாகச் செய்தி பரவியது.

இந்நிலையில் மோகன்பாபு தரப்பு இதை மறுத்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “மோகன்பாபுவும், மனோஜும் பரஸ்பரம் புகார் அளித்ததாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. மனோஜ் காயங்களுடன் போலீஸ் ஸ்டேஷன் வந்ததாகக் கற்பனைக் கதைகள் பரப்பப்படுகின்றன. அதில் எந்த உண்மையும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களாக மோகன்பாபு குடும்பத்தில் சொத்து பிரச்சினை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மனோஜ் மன்சுவுக்கும் விஷ்ணு மன்சுவுக்கும் பிரச்சினை என்று ஏற்கெனவே செய்திகள் வெளியாகி இருந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

சினிமா

29 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்