சத்யதேவ், டாலி தனஞ்செயா, பிரியா பவானி சங்கர், சத்யராஜ் உட்பட பலர் இணைந்து நடித்துள்ள படம், ‘ஜீப்ரா’. பான் இந்தியா முறையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடந்தது. சத்யதேவ் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
நடிகர் சத்யராஜ் பேசும்போது, “நான் இந்தளவு வெற்றியை எதிர்பார்த்து நடிக்கவில்லை. ஒவ்வொரு நாளும் நல்ல விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. சத்யதேவை தமிழுக்கு வரவேற்கிறேன். அவர் தமிழ் கற்றுக்கொள்வதாகச் சொன்னார். நான் 15 ஆண்டுகளாகத் தெலுங்கில் நடிக்கிறேன். இன்னும் தெலுங்கு கற்கவில்லை. இதில் சத்யதேவ் என்னைத் தெலுங்கில் டப் செய்ய வைத்து விட்டார். இயக்குநர் ஈஸ்வர் அற்புதமாகப் படத்தைத் தந்துள்ளார்” என்றார்.
சத்யதேவ் பேசும்போது, “தமிழ்நாட்டுடன் எனக்கு ஸ்பெஷல் தொடர்பு இருக்கிறது. தமிழ்ப்படங்கள் எனக்குப் பிடிக்கும். தமிழில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ‘ஜீப்ரா’ மூலம் அது நடந்ததில் மகிழ்ச்சி. இப்படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. விரைவில் தமிழ் கற்றுக் கொள்வேன்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago