சென்னை: ஜோஜு ஜார்ஜ் இயக்குநராக அறிமுகமாகும் ‘பனி’ படத்தை பார்த்து நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
நடிகர் ஜோஜு ஜார்ஜ் இயக்கி நடித்துள்ள மலையாள திரைப்படம் ‘பனி’. இந்தப் படம் கடந்த அக்டோபர் 24-ம் தேதி கேரளாவில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சாகர் சூர்யா, அபிநயா, அனூப் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு சாம் சிஎஸ், சந்தோஷ் நாராயணன், விஷ்ணு விஜய் ஆகியோர் இசையமைத்துள்ளனர். ஜோஜு ஜார்ஜ் இயக்குநராக அறிமுகமாகியுள்ள இந்தப் படம் மொத்தமாக ரூ.20 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
படத்தின் பட்ஜெட் ரூ.10 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்தப் படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை தமிழகத்தில் வெளியாக உள்ளது. இதையொட்டி நடிகர் கமல்ஹாசனுக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. படத்தை பார்த்து நடிகர் கமல், ஜோஜு ஜார்ஜ் பாராட்டினார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ள குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago