பாட்னா: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, ஃபகத் பாசில் உட்பட பலர் நடித்துள்ள ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று பிஹார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்வில் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.
ஆக்ஷன், ரொமான்ஸ், த்ரில் என சுவாரஸ்யங்களுடன் வெளியாகி உள்ளது படத்தின் ட்ரெய்லர். கடந்த 2021-ல் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘புஷ்பா’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து 2-ம் பாகம் அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து படப்பிடிப்பு பணிகள் நடைபெற்றது. படத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து வரும் டிசம்பர் 5-ம் படம் ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
புஷ்பாவின் கடத்தல் நெட்வொர்க், புஷ்பா - எஸ்.பி பன்வார் சிங் ஷெகாவத் (ஃபகத் பாசில்) இடையிலான மோதல், புஷ்பா - ஸ்ரீவள்ளியின் (ராஷ்மிகா) திருமண வாழ்க்கை உள்ளிட்ட காட்சிகள் 2.48 நிமிடம் ரன் டைம் கொண்ட ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளது. ‘புஷ்பான்றது பேர் இல்ல. புஷ்பானா பிராண்டு’ போன்ற வசனங்கள் இதில் இடம்பெற்றுள்ளது. >>ட்ரெய்லர் வீடியோ
முக்கிய செய்திகள்
சினிமா
49 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago