‘புஷ்பா 2’ படக்குழுவினர் பின்னணி இசைக்காக தமனிடம் பேசி பணிகளைத் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
டிசம்பர் 5-ம் தேதி ‘புஷ்பா 2’ படம் வெளியாக உள்ளது. இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இறுதிகட்ட படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. இதனிடையே, படத்தின் பின்னணி இசைக்காக தமனை ஒப்பந்தம் செய்து, பணிகளைத் தொடங்கியிருக்கிறது படக்குழு. இது தெலுங்கு திரையுலகினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏனென்றால் சுகுமார் படம் என்றாலே தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைப்பாளராக இருப்பார். ‘புஷ்பா’ படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசைக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. தற்போது ‘புஷ்பா 2’ படத்துக்கும் தேவி ஸ்ரீ பிரசாத் தான் பணிபுரிந்து வருகிறார். ஆனால், எந்தக் காரணத்தினால் தமன் பின்னணி இசை அமைக்கவுள்ளார் என்பது தெரியவில்லை.
இது குறித்து படக்குழுவினரும் அமைதி காத்து வருகின்றனர். நவம்பர் 2-ம் வாரத்தில் இருந்து ‘புஷ்பா 2’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கவுள்ளது. அப்போது தான் உண்மையான காரணம் என்ன என்பது தெரியவரும்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago