பெங்களூரு: மாநில அரசின் விருது பெற்ற கன்னட திரைப்பட இயக்குநர் குரு பிரசாத், பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது இறப்புக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டியிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் வீட்டின் கதவை தட்டிப்பார்த்தும், திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது சிதைத்த நிலையில் இருந்த குருபிரசாத் பிரேதத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பெங்களூரு எஸ்.பி கூறுகையில், “இயக்குநர் குரு பிரசாத் 5, 6 நாட்களாக முன் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டுக்கு வருகை தந்துள்ளார். அதன் பிறகு அவர் வெளியே எங்கும் செல்லவில்லை.
இந்த நாட்களில் அவர் தன்னுயிரை மாய்த்திருக்கலாம் என தெரிகிறது. முதல் கட்ட விசாரணையில் அவருக்கு நிதி நெருக்கடி இருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் முழுமையான விசாரணைக்குப் பிறகு உரிய காரணம் தெரியவரும்” என்றார். 52 வயதான குருபிரசாத்துக்கு மனைவியும், 2 மகள்களும் உண்டு. அவர் கடுமையான நிதி நெருக்கடியில் இருந்ததாக திரைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குரு பிரசாத் திரை பயணம்: கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘மடா’ (mata) கன்னட படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் குருபிரசாத். அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் அவர் நடிகராகவும் கவனம் பெற்றார். இந்தப் படத்துக்காக அவருக்கு சிறந்த உறுதுணை நடிகருக்கான மாநில அரசின் விருது வழங்கப்பட்டது. அடுத்து 2009-ல் வெளியான ‘எட்டேலு மஞ்சுநாதா’ படத்துக்காக சிறந்த திரைக்கதை பிரிவில் மாநில அரசு விருது கிடைத்தது. கடைசியாக அவர் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் ‘ரங்க நாயகா’ திரைப்படம் வெளியானது. அவரின் புதிய படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்ததாக கூறப்பட்ட நிலையில் குருபிரசாத் மரணம் திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago