“சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” - விமர்சகருக்கான மிரட்டல் குறித்து ஜோஜூ ஜார்ஜ் விளக்கம்

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: “வாழ்க்கை எனக்கு ஒருபோதும் எளிதாக இருந்ததில்லை. நான் இன்று இந்த இடத்தை அடைவதற்கு பல தடைகளையும், வலிகளையும் கடந்து வந்துள்ளேன். இந்தப் படத்துக்காக பெரும் பணத்தை முதலீடு செய்துள்ளேன். அது வீணாக போவதை பார்த்துகொண்டிருக்க மாட்டேன். விமர்சகருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என நடிகரும், இயக்குநருமான ஜோஜூ ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘பனி’ திரைப்படம் கடந்த அக்டோபர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்களை வெளியிட்டதால், தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜோஜூ ஜார்ஜ் மிரட்டியதாக ஆதர்ஷ் என்ற சினிமா விமர்சகர் குற்றம் சாட்டினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் ஜோஜூ ஜார்ஜுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அந்த விமர்சகரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதை ஒப்புக்கொண்டுள்ள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கத்தில், “ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு பின்னால் பலரின் கடினமான கூட்டு உழைப்பு உள்ளது. நான் ஒன்றும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானவன் அல்ல. ஒரு படம் குறித்து தங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ள விமர்சகர்களுக்கு உரிமை உண்டு. இதற்கு முன்னர் பல படங்கள் விமர்சிக்கப்பட்டுள்ளன. ஆனால் நான் யாரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதில்லை. ஆனால், இந்த விவகாரத்தை பொறுத்தவரை, விமர்சகர் படத்தின் ஸ்பாயிலரை வெளியிட்டுள்ளார். அதை பல தளங்களிலும் வெளியிட்டு, வேண்டுமென்றே படத்தை இழிவுப்படுத்தும் நோக்கில் செயல்பட்டுள்ளார். நான் முன்பு சொன்னதை தான் இப்போதும் சொல்கிறேன்.

வாழ்க்கை எனக்கு ஒருபோதும் எளிதாக இருந்ததில்லை. நான் இன்று இந்த இடத்தை அடைவதற்கு பல தடைகளையும், வலிகளையும் கடந்து வந்துள்ளேன். பலரின் 2 ஆண்டுகள் கடினமான உழைப்பு தான் இந்த திரைப்படம். இந்தப் படத்துக்காக நான் பெரும் பணத்தை முதலீடு செய்துள்ளன். அதனை யாரோ ஒருவர் தன் சுயநலத்துக்காக அதை வீணாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை பார்த்துக்கொண்டு நான் விடமாட்டேன். அவருக்கு எதிராக நான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக விமர்சகர் ஆதர்ஷ் வெளியிட்ட வீடியோவில், “பனி படத்தில் இடம்பெற்றிருந்த பாலியல் வன்கொடுமை குறித்து நான் எதிர்மறையாக விமர்சனத்தை வெளியிட்டிருந்தேன். ஒரு திரைப்படத்தில் பாலியல் வன்கொடுமை காட்சி காட்சிப்படுத்தப்படும்போது, அது பார்வையாளர்களின் அனுதாபத்தை தூண்டும் வகையில் இருக்க வேண்டும். ஆனால், ஜோஜூ ஜார்ஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பெண்களை காட்சிப்பொருளாக சித்தரிக்கும் வகையில் கிட்டத்தட்ட ‘பி கிரேடு’ படத்துக்கு ஒப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதை நான் சொன்னதற்காக ஜோஜூ ஜார்ஜ் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘தைரியம் இருந்தால் நேருக்கு நேர் மோது’ என மிரட்டல் விடுத்தார். நான் இதற்கெல்லாம் பயப்படுபவனில்லை. அவர் இது போல மற்றவர்களுக்கு மிரட்டல் விடுக்க கூடாது என்பதற்காக தான் இந்த வீடியோவை வெளியிட்டேன்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

23 mins ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்