திரையில் காதலர்களைப் பிரித்த வில்லன்: நேரில் சரமாரியாக தாக்கிய பெண்

By செய்திப்பிரிவு

அன்சன் ராமச்சந்திரா, ஸ்ரவாணி கிருஷ்ணவேணி, என்.டி.ராமசுவாமி உட்பட பலர் நடித்துள்ள தெலுங்கு படம், ‘லவ் ரெட்டி’. ஸ்மரன் ரெட்டி இயக்கியுள்ள இந்தப் படம் கடந்த 18-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படக்குழுவினர் ஹைதராபாத்தில் ‘லவ் ரெட்டி’ ஓடிக்கொண்டிருக்கும் திரையரங்குகளுக்கு சமீபத்தில் சென்றனர்.

ஒரு திரையரங்கில், படத்தில் வில்லனாக நடித்துள்ள என்.டி. ராமசுவாமி, காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மகள் மீது பெரிய கல்லை எறிகிறார். அது அவர் நெற்றியில் பட்டு காயம் ஏற்படும் காட்சி ஓடிக் கொண்டிருந்த போது படக்குழுவினருக்காகக் காட்சி நிறுத்தப்பட்டது. அவர்கள் உள்ளே சென்று ரசிகர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது வேகமாக வந்த பெண் ஒருவர், அனைவரையும் தள்ளிவிட்டு, வில்லனாக நடித்த என்.டி.ராமசுவாமியின் சட்டைக் காலரை பிடித்து சரமாரியாகத் தாக்கினார். இதை எதிர்பார்க்காத அவர் அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அந்தப் பெண்ணிடம் இருந்து அவரை மீட்டனர். காதலரைப் பிரித்து கொடுமையாக நடந்துகொண்டதாகக் கூறி, அந்தப் பெண் மீண்டும் மீண்டும் அடிக்கப் பாய்ந்தார். படக்குழுவினர் அது சினிமா என்று கூறியும் சமாதானமடையவில்லை. பிறகு அங்கிருந்தவர்கள் நடிகரைப் பத்திரமாக வெளியே அழைத்துச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்