திருவனந்தபுரம்: 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மலையாளத்தில் நடிக்கும் நஸ்ரியாவின் ‘சூக்ஷமதர்ஷினி’ திரைப்படம் வரும் நவம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாளம், தமிழ் படங்களில் நடித்து வந்த நடிகை நஸ்ரியா, நானி நடிப்பில் வெளியான ‘அன்டே சுந்தராணிகி’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். இந்தப் படம் 2022-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்துக்குப் பிறகு 2 ஆண்டுகளாக நஸ்ரியா நடிக்கும் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. அவரின் கம்பேக்குக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அவர் பசில் ஜோசப்புடன் இணைந்து புதிய மலையாளப் படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படத்துக்கு ‘சூக்ஷமதர்ஷினி’ (Sookshmadarshini) என தலைப்பிடப்பட்டுள்ளது.
எம்.சி.ஜித்தின் இயக்கும் இப்படத்தை சமீர் தாஹிர், ஷைஜு காலித் இணைந்து தயாரிக்கின்றனர். கிறிஸ்டோ சேவியர் படத்துக்கு இசையமைக்கிறார். தீபக் பரம்போல், சித்தார்த் பரதன், மெரின் பிலிப், அகில பார்கவன், பூஜா மோகன்ராஜ், கோட்டயம் ரமேஷ், கோபன் மங்காட் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படம் வரும் நவம்பர் 22-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நஸ்ரியாவை பொறுத்தவரை அவர் 2020-ல் வெளியான ‘ட்ரான்ஸ்’ மலையாளப் படத்தில் நடித்தார். அதன் பிறகு 4 ஆண்டுகள் கழித்து அவர் நடிப்பில் மலையாள திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago