பெங்களூரு: “படத்தில் எனக்கு எவ்வளவு சம்பளம் கிடைத்தது, நல்ல படமா, மோசமான படமா என்பது குறித்தோ, என்னுடைய தேர்வு குறித்தோ எந்த கேள்வியையும் என்னிடம் கேட்காதவர் என்னுடைய மனைவி ராதிகா. ‘நீங்கள் சந்தோஷமா?’ என்ற ஒற்றை கேள்வியை மட்டும்தான் அவருக்கு தேவை” என கன்னட நடிகர் யஷ் நெகிழ்ச்சியுடன் தனது மனைவி குறித்து குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் அவர் அளித்த பேட்டியில், தன் மனைவி குறித்து கூறுகையில், “ராதிகா போல ஒரு மனைவி எனக்கு கிடைத்தது பாக்கியம் என்று தான் சொல்வேன். அவர் எனக்கு சிறந்த துணைவி. அவர் தான் என்னுடைய முழு பலம். எப்போதும் எனக்கு உறுதுணையாக இருக்க கூடியவர். என்னைப் பற்றி முழுமையாக அறிந்தவர். நாங்கள் இருவரும் சேர்ந்தே முன்னேறுகிறோம். முதலில் அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர்.
பின்னர் தான் மனைவி. அவர் ஒருவர் மட்டும் தான், படத்தில் எனக்கு எவ்வளவு சம்பளம் கிடைத்தது, நல்ல படமா, மோசமான படமா என்பது குறித்தோ, என்னுடைய தேர்வு குறித்தோ எந்த கேள்வியையும் என்னிடம் கேட்காதவர். ‘நீங்கள் சந்தோஷமா?’ என்ற ஒற்றை கேள்வியை மட்டும் தான் அவர் என்னிடம் கேட்பார். அதை தவிர்த்து, தன்னுடன் நேரம் செலவழிக்க வேண்டும், தன் மீது கவனம் செலுத்த வேண்டும் என்பதை விரும்பக் கூடியவர். சொல்லப்போனால் அது எனக்கு மிகவும் கடினமான ஒன்று” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago