’விஸ்வம்பாரா’ படத்தின் டீஸருக்கு இணையத்தில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
’பிம்பிசாரா’ படத்தின் இயக்குநர் வாஷிஸ்டா அடுத்து இயக்கி வரும் படம் ‘விஸ்வம்பாரா’. இதில் சிரஞ்சீவி, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதனை பெரும் பொருட்செலவில் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
அக்டோபர் 12-ம் தேதி ‘விஸ்வம்பாரா’ படத்தின் டீஸரை இணையத்தில் வெளியிட்டது படக்குழு. ஒருதரப்பினர் கொண்டாடி வந்தாலும், இன்னொரு தரப்பு கடுமையாக விமர்சித்து வருகிறது. என்னவென்றால், டீஸரில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்துமே வெவ்வேறு ஹாலிவுட் படங்களின் காட்சிகளின் தழுவலில் உருவாக்கி இருக்கிறார்கள்.
அதிலும், சில காட்சிகள் இணையத்தில் விற்பனை செய்யப்படும் காட்சிகளை வாங்கி உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். மேலும், ‘அவதார்’ பாணியில் அந்த டீஸரில் வரும் சின்ன குழந்தையை உருவாக்கி இருக்கிறார்கள். இவை அனைத்தையும் மேற்கோள் காட்டி படக்குழுவினருக்கு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்த விமர்சனத்துக்கு படக்குழுவினர் இன்னும் பதிலளிக்கவில்லை. ஆனால், பொங்கல் வெளியீட்டில் இருந்து பின்வாங்கி மே வெளியீட்டுக்கு முடிவு செய்திருக்கிறார்கள். ஏனென்றால், பொங்கலுக்கு சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் நடித்த ‘கேம் சேஞ்சர்’ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
42 mins ago
சினிமா
53 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago