ஹைதராபாத்: “இந்த காலகட்டத்தில் நாம் அலசுவதற்காகவே ஒவ்வொரு படத்தையும் பார்க்கிறோம். தொடர்ந்து அந்த படத்தை அலசி, ஆராய்ந்து அதிகமாக யோசிக்கிறோம்.” என்று நடிகர் ஜூனியர் என்டிஆர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள ஜூனியர் என்டிஆர் படம் தொடர்பான நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அந்த கூறியிருப்பதாவது: பார்வையாளர்களாக நாம் மிகவும் நெகட்டிவ் ஆக மாறிவிட்டோம். அப்பாவித் தனமான மனநிலையில் நம்மால் ஒரு படத்தை ரசிக்கமுடியவில்லை.
என் மகன்களுடன் நான் படம் பார்க்கும்போது அவர்கள் அந்த படத்தில் நடித்த ஹீரோ யார்? என்ன படம்? என்பதை பற்றியெல்லாம் கவலைப்படுவதே இல்லை. அவர்கள் படங்களை ரசிக்கிறார்கள். நம்மால் ஏன் அதுபோன்ற அப்பாவித்தனத்துடன் இருக்கமுடிவதில்லை என்று எனக்கு ஆச்சர்யமாக உள்ளது.
இந்த காலகட்டத்தில் நாம் அலசுவதற்காகவே ஒவ்வொரு படத்தையும் பார்க்கிறோம். தொடர்ந்து அந்த படத்தை அலசி, ஆராய்ந்து அதிகமாக யோசிக்கிறோம். இந்த டிரெண்டும் விரைவில் மாறக்கூடும். இவ்வாறு ஜூனியர் என்டிஆர் தெரிவித்துள்ளார்.
» ரெப்போ விகிதம் 6.5% ஆக தொடரும்: ரிசர்வ் வங்கி; தொடர்ந்து 10-வது முறையாக மாற்றமில்லை
» ‘காஷ்மீர் மக்களின் விழைவை நிறைவேற்ற அளிக்கப்பட்ட தீர்ப்பு’ - தேர்தல் வெற்றிக்கு ஸ்டாலின் வாழ்த்து
நடிகர் ஜூனியர் என்டிஆர் ‘ஆச்சார்யா’ படத்தை இயக்கிய இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘தேவரா’. இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதித்தார். பிரகாஷ்ராஜ், சைஃப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. முதல் பாகம் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ‘சுறா’, ‘சிலம்பாட்டம்’ படங்களைப்போல இருப்பதாக பலரும் விமர்சித்தனர். இந்நிலையில், நடிகர் ஜூனியர் என்டிஆர் விமர்சனங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 mins ago
சினிமா
18 mins ago
சினிமா
52 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago