திருவனந்தபுரம்: மம்மூட்டி, விநாயகன் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. நாகர்கோயிலில் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெறுகிறது.
மம்மூட்டி நடிப்பில் கடைசியாக வெளியானது ‘டர்போ’. ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. விநாயகன் நடிப்பில் ‘ஜெயிலர்’, ‘காசர்கோல்டு’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. இவர்கள் இருவரும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை துல்கர் சல்மானை வைத்து ‘குரூப்’ (Kurup) படத்தை ஜித்தின் கே ஜோஸ் இயக்குகிறார். மம்மூட்டியின் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படத்தை தயாரிக்கிறார்.
மற்ற நடிகர்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. மேலும் இந்தப் படத்தில் விநாயகனுக்கு வில்லனாக மம்மூட்டி நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நாகர்கோயிலில் நடைபெற்று வருகிறது. மம்மூட்டி நடிப்பில் அடுத்ததாக ‘பஸூக்கா’, ‘டோமினிக் தி லேடீஸ் பர்ஸ்’ ஆகிய திரைப்படங்கள் அடுத்து வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago