மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார்

By செய்திப்பிரிவு

பிரபல மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார். அவருக்கு வயது 79.

1950-களில் நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த இவர், சுமார் 700 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மம்மூட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துள்ளார். தமிழில் சத்யா உட்பட சில படங்களில் நடித்துள்ளார். வயது முதிர்வு காரணமான உடல் உபாதைகளால் கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவரை சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் காலமானார். அவர் மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த பொன்னம்மாவின் கணவர் மணிசுவாமி ஏற்கெனவே காலமாகிவிட்டார். மகள் பிந்து அமெரிக்காவில் இருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

55 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்