“நீதிமன்றம் தீர்வு காணும்” - மலையாள திரையுலகின் பாலியல் புகார் சர்ச்சை; சுரேஷ் கோபி கருத்து

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: “இந்த அனைத்து குற்றச்சாட்டுகளும் ஊடகங்களால் புனையப்பட்டவை. குற்றச்சாட்டுகள் வடிவில் உள்ள புகார்களுக்கும் நீதிமன்றம் தீர்வு காணும்” என நடிகரும், மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

நடிகரும், எம்.எல்.ஏவுமான முகேஷ் மீது பாலியல் புகார் எழுந்துள்ளதே என சுரேஷ் கோபியிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “குற்றச்சாட்டுகள் வடிவில் உள்ள புகார்களுக்கு நீதிமன்றம் தீர்வு காணும். நீங்கள் நீதிமன்றமா? இதுவரை எழுந்துள்ள புகார்கள் அனைத்தும் குற்றச்சாட்டுகளே. தனியார் நிகழ்விலிருந்து வரும் என்னிடம் இந்த கேள்விகளை கேட்கிறீர்கள்.

நான் என் அலுவலகத்திலிருந்து வந்தால் நீங்கள் அது குறித்து கேட்க வேண்டும். என் வீட்டிலிருந்து வெளியே வந்தால் அது தொடர்பாக கேட்க வேண்டும். நடிகர் சங்க அலுவலகத்திலிருந்து வெளியே வந்தால் மட்டுமே சினிமா குறித்து நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்” என கடிந்து கொண்டார்.

மேலும், “இந்த அனைத்து குற்றச்சாட்டுகளும் ஊடகங்களால் புனையப்பட்டவை. இது ஊடகங்களுக்கான தீவனம். ஊடகங்கள் இதுபோன்ற செய்திகளை தூண்டிவிடுவது மட்டுமல்லாமல், சமூகத்தின் மனநிலையை தவறாக வழிநடத்துகின்றன. அனைத்து விவகாரங்களும் நீதிமன்றத்தின் முன்னிலையில் உள்ளன. நீதிமன்றத்துக்கு நுண்ணறிந்து ஆராயும் திறன் உள்ளது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE