மாஸ் நானி... அதகள எஸ்.ஜே.சூர்யா: ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: நானி, எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ‘சூர்யாவின் சனிக்கிழமை’ (சரிபோதா சனிவாரம்) படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

நானி நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘அந்தே சுந்தரானிகி’ படத்தின் இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ள படம் ‘சரிபோதா சனிவாரம்’ (Saripodhaa Sanivaaram) என பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இதனை ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை தயாரித்த டிவிவி என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கிறது.

இதில் நானி, எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். ஆகஸ்ட் 29-ம் தேதி ரிலீஸாக உள்ள இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - சித்திரகுப்தனும் எமனும் கலந்த ஒரு கதபாத்திரமாக வரும் ஹீரோவாக நானி. ஒரு பக்கம் பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றம் காட்டும் அவர், இன்னொரு பக்கம் அதிரடியாக மாஸ் ஆக்‌ஷன் அவதாரம் எடுத்து கவனிக்க வைக்கிறார்.

ஆனால் ட்ரெய்லரின்படி படத்தின் உண்மையான ஹீரோ எஸ்.ஜே.சூர்யாவாகத்தான் இருப்பார் என்று தோன்றுகிறது. அந்த அளவுக்கு மூன்று நிமிட ட்ரெய்லரிலேயே தனது ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் மூலம் அதகளப்படுத்தி இருக்கிறார்.

ட்ரெய்லரில் எதை காட்டினால் படம் வியாபாரம் ஆகும் என்ற நுணுக்கத்தை நன்றாக தெரிந்து கொண்டு அதன்படி மிகசிறப்பாக கட் செய்யப்பட்ட ஒரு ட்ரெய்லரை கொடுத்திருக்கிறது படக்குழு. பின்னணியில் வரும் ஜேக்ஸ் பிஜாய் இசையும் ஈர்க்கிறது. ‘சரிபோதா சனிவாரம்’ ட்ரெய்லர்:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்