வயநாடு நிலச்சரிவு பகுதிகளை ராணுவ உடையில் பார்வையிட்ட மோகன்லால்

By செய்திப்பிரிவு

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 340-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அங்கு மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை, வனத்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடிகரும், ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலுமான மோகன்லால், ராணுவ சீருடையில் நேரில் சென்று மீட்புப் பணிகளை நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறும்போது, “பார்க்கும் இடம் முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளதால் மக்கள் இன்னும் சிக்கி இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

மீட்புப் பணிக்காக உழைக்கும் அனைவருக்கும் நன்றி. இந்தியா கண்டிராத பேரிழப்புகளில் இதுவும் ஒன்று. ஏற்கெனவே இழந்ததை திரும்பப் பெற முடியாது. ஆனால் இந்த மக்களின் எதிர்காலத்துக்காக உதவ வேண்டும்" என்றார். தனது விஸ்வசாந்தி அறக்கட்டளை மூலம் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.3 கோடி வழங்குவதாக மோகன்லால் அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE