டோவினா தாமஸின் ‘நரிவேட்டா’ மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் சேரன்!

By செய்திப்பிரிவு

கொச்சி: நடிகர் டோவினா தாமஸ் ஹீரோவாக நடிக்கும் ‘நரிவேட்டா’ படத்தில் இயக்குநர் சேரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகம் ஆகிறார் சேரன்.

’இஷ்க்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற அனுராஜ் மனோகர் இயக்கத்தில் டோவினா தாமஸ் ஹீரோவாக நடிக்கும் படம் ‘நரிவேட்டா’. இப்படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, ஆர்யா சலீம், ப்ரியம்வதா கிருஷ்ணன், ரினி உதயகுமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இவர்களுடன் இயக்குநர் சேரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதன் மூலம் சேரன் மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை 26 முதல் தொடங்கப்பட உள்ளது.

இது குறித்து சேரன் தனது எக்ஸ் பதிவில், “நண்பர்களே, முதன்முதலாக நீண்டநாள் ஆசையாக இருந்த ஒன்று நிறைவேறி இருக்கிறது. மலையாள திரைப்படம் ஒன்றில் ஆகச்சிறந்த நடிகரான டோவினோ தாமஸ் உடன் இணைந்து 'இஸ்க்' படத்தின் இயக்குனரான அனுராஜ் மனோகர் இயக்கத்தில் நடிக்கிறேன். என்றும்போல உங்கள் ஆதரவும் அன்பும் தேவை. நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்