சென்னை: ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீசாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘கேம் சேஞ்சர்’. இதில் கியாரா அத்வானி நாயகி. அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, நவீன் சந்திரா, ஜெயராம், சுனில் உட்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு, மெகா பட்ஜெட்டில் தயாரிக்கிறார். தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஜரகண்டி’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ அண்மையில் வெளியானது. கடந்த 2021-ம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. படத்தை தசரா பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், ஹைதராபாத்தில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் தில் ராஜூவிடம், ‘கேம் சேஞ்சர்’ குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சந்திப்போம்” என ஒற்றை வரியில் பதில் கூறியுள்ளார். இதன் மூலம் படம் கிறிஸ்துமஸுக்கு வெளியாக உள்ளது உறுதியாகியுள்ளது. ஆமீர்கானின் ‘சிதாரே ஜமீன் பர்’ பாலிவுட் படம் கிறிஸ்துமஸுக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago