சென்னை: “ஃபஹத் ஃபாசில் நடிப்பை நான் பல படங்களில் பார்த்திருக்கிறேன். ‘ஆவேஷம்’ பார்த்த பின் அவரது வெறித்தனமான ரசிகராக மாறிவிட்டேன்” என நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.
‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விபின் தாஸ் இயக்கும் புதிய படத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் மூலம் அவர் மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார். இந்நிலையில், இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், “இது என்னுடைய முதல் மலையாள திரைப்படம். அதுவும் ஃபஹத் ஃபாசில் போன்ற ஒருவருடன் நடிக்கிறேன் என்பதே எனக்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறது. அவரது நடிப்பை நான் பல படங்களில் பார்த்திருக்கிறேன்.
ஆனால், ‘ஆவேஷம்’ பார்த்த பின் அவரது வெறித்தனமான ரசிகராக மாறிவிட்டேன். அதுவும் படத்தில் ‘ரங்கன்’ கதாபாத்திரத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் அழுத்தமான உணர்வுகளை வெளிப்படுத்தி இருப்பார். அவரது முக பாவனைகளை மிகவும் ரசித்தேன்” என்றார். எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் அடுத்ததாக, ‘ராயன்’ படம் திரைக்கு வருகிறது. இது தவிர்த்து, நானியின் 'சரிபோதா சனிவாரம்', ராம்சரணின் ‘கேம் சேஞ்சர்’, விக்ரமின் ‘வீர தீர சூரன்’, விக்னேஷ் சிவனின் ‘எல்ஐசி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
29 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago