ராஜமவுலி பற்றிய ஆவணப்படம்

By செய்திப்பிரிவு

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, ‘பாகுபலி’ படத்தை இயக்கியதன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தார். அடுத்து அவர் இயக்கிய ‘ஆர்ஆர்ஆர்’ படமும் இந்தியா தாண்டி வெளிநாடுகளிலும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது.

இந்நிலையில் ராஜமவுலி பற்றிய ஆவணப்படம் உருவாகியுள்ளது. ‘மாடர்ன் மாஸ்டர்ஸ்: ராஜமவுலி’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஆக.2-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதில் அவரது படமாக்கும் முறை, நேர்காணல், அவரை பற்றி ஹாலிவுட் இயக்குநர்கள் ஜேம்ஸ் கேமரூன், ஜோ ரூஸோ, இந்திப் பட இயக்குநர் கரண் ஜோஹர், நடிகர்கள் பிரபாஸ், ராம்சரண், ராணா, ஜூனியர் என்.டி.ஆர் அளித்துள்ள பேட்டி ஆகியவையும் இடம் பெறுகின்றன.

இந்த வாழ்க்கை வரலாற்று ஆவணப்படத்தை அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட், பிலிம் கம்பானியன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. ராகவ் கன்னா இயக்கியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்