“சென்னை எனக்கு தூங்க இடம் கொடுத்து வாய்ப்பளித்த ஊர்” - சுரேஷ் கோபி நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

சென்னை: “சென்னை என்னை வளர்த்த ஊர். தூங்க இடம் கொடுத்து வாய்ப்பு கொடுத்த இடம் சென்னை. தமிழ்நாட்டை நான் மிகவும் நேசிக்கிறேன். அதன் மீது அளவுகடந்த பாசம் உண்டு” என மத்திய இணைய அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், “கேரள மக்கள் கொடுத்த ஆசீர்வாதத்தால் தான் நான் எம்.பியாகியிருக்கிறேன். நான் முன்பே சொன்னது போல தமிழ்நாட்டுக்கும் சேர்த்து எம்பியாக செயல்படுவேன். எனக்கு சுற்றுலாத் துறை ஓகே. எந்த அளவுக்கு வேணும்னாலும் அந்த துறையில் யோசிப்பேன். ஆனால், பெட்ரோலியத்தை பொறுத்தவரை அது முழுவதும் டெக்னிக்கல். அதை நான் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். அதன்பின் தான் பேச முடியும்.

பெட்ரோல் விலையை குறைப்பதை மட்டும் யோசிக்காதீர்கள். கச்சா எண்ணெய் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து புரிந்துகொண்டால் இந்த கேள்வி எழாது. சபரிமலை விவகாரத்தை யாரும் தொடாதீர்கள். அதை தொட்டவர்கள் அமைதியாக உட்காந்துள்ளனர். அதை இனி யாரும் தொடமாட்டார்கள். நீங்கள் பயப்பட வேண்டாம்” என்றார்.

மேலும், “சென்னை என்னை வளர்த்த ஊர். தூங்க இடம் கொடுத்து வாய்ப்பு கொடுத்த இடம் சென்னை. தமிழ்நாட்டை நான் மிகவும் நேசிக்கிறேன். அதன் மீது அளவுகடந்த பாசம் உண்டு” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்