லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் நடைபெறும் ‘லாஸ் ஏஞ்சல்ஸ் இந்திய திரைப்பட விழா’வில் மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் ‘உள்ளொழுக்கு’ (Ullozhukku) திரைப்படம் திரையிடப்பட உள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் ‘லாஸ் ஏஞ்சல்ஸ் இந்திய திரைப்பட விழா’ (IFFLA) இன்று (ஜூன் 27) தொடங்கி ஜூன் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படங்கள் திரையிடப்பட உள்ளன. அந்த வகையில் கிறிஸ்டோ டாமி இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகியுள்ள ‘உள்ளொழுக்கு’ திரைப்படம் திரையிடப்பட உள்ளது. ஊர்வசி - பார்வதியின் அழுத்தமான நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள புகழ்பெற்ற சன்செட் பவுல்வர்டு திரையரங்கில் வரும் 29-ம் தேதி இப்படம் திரையிடப்பட உள்ளது. இந்த திரையிடல் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நடிகை பார்வதி லாஸ் ஏஞ்சல் செல்கிறார்.
மேலும், இந்த திரைப்பட விழாவின் இறுதிப் படமாக விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மகாராஜா’ திரைப்படம் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. > உள்ளொழுக்கு விமர்சனத்தை வாசிக்க:‘Ullozhukku’ திரை விமர்சனம்: ஊர்வசி - பார்வதியின் உணர்வுப் போராட்டம் எப்படி?
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago