அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் படம், 'புஷ்பா 2'. சுகுமார் இயக்கும் இந்தப் படம் ஆக.15-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடியவில்லை என்பதால் அந்த தேதியில் வெளியாகாது என்கிறார்கள்.
இதுகுறித்து சினிமா விநியோகஸ்தர்கள் தரப்பில் பேசிக்கொண்டாலும் தயாரிப்புத் தரப்பில் அறிவிக்கவில்லை. இருந்தாலும் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவான 5 படங்கள் அந்த தேதியில் களமிறங்க ஆயத்தமாகி வருகின்றன.
புரி ஜெகன்நாத் இயக்கத்தில் ராம் பொத்தினேனி, சஞ்சய் தத், காவ்யா தாப்பர் நடித்துள்ள 'டபுள் ஐஸ்மார்ட்'ஆக.15-ல் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு விட்டது. இந்தியில் அக்ஷய்குமார், டாப்ஸி நடித்துள்ள 'கெல் கெல் மேய்ன்' படமும் அதே தேதியில் வெளியாக இருக்கிறது. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள விக்ரமின் 'தங்கலான்', சிவகார்த்திகேயனின் 'அமரன்' படங்களையும் அந்த தேதியில் வெளியிட ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர், செப்.27-ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டாலும் முன்னதாக ஆக.15-ல் வெளியிட யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
15 mins ago
சினிமா
23 mins ago
சினிமா
27 mins ago
சினிமா
57 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago