சவுபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி உட்பட பலர் நடித்து வெளியான மலையாள படம், ‘மஞ்சும்மள் பாய்ஸ்’. சிதம்பரம் இயக்கி இருந்தார்.
இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.250 கோடி வசூலித்தது. இதை ஷான் ஆண்டனி, நடிகர் சவுபின் சாஹிர், பாபு சாஹிர் இணைந்து தயாரித்திருந்தனர். இந்தப் படத்தில் ரூ.7 கோடி முதலீடு செய்ததாகவும் லாபத்தில் 40% பங்கு தருவதாகக் கூறி தரவில்லை என்றும் சிராஜ் என்பவர் வழக்குத் தொடுத்தார். இதன் அடிப்படையில் விசாரித்த போலீஸார், தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு மோசடியில் ஈடுபட்டதாகவும், தயாரிப்பு செலவு ரூ. 18.65 கோடி என்ற நிலையில், ரூ.22 கோடி என்று பொய்யாகத் தெரிவித்துள்ளனர் எனவும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியிருந்தனர்.
இதில் கருப்புப் பணம் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறைக்குக் கிடைத்த தகவலை அடுத்து அவர்களும் விசாரணையை தொடங்கினர். சில நாட்களுக்கு முன் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷான் ஆண்டனியிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் நடிகரும் தயாரிப்பாளருமான சவுபின் சாஹிரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். பல மணி நேர விசாரணைக்கு பின் அவரை விடுவித்த அதிகாரிகள், மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago