தமிழில், பிரம்மன், சிவப்பு, பட்டாஸ், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் நவீன் சந்திரா. தெலுங்கிலும் நடித்துள்ள இவர் அடுத்து நடித்துள்ள படத்துக்கு ‘லெவன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
தமிழ், தெலுங்கில் உருவாகும் இதை ஏ.ஆர் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. லோகேஷ் அஜில்ஸ் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் சுந்தர்.சி.யிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். டி.இமான் இசை அமைத்துள்ளார். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்துள்ள இதில், ரியா ஹரி, அபிராமி, ஆடுகளம் நரேன், திலீபன், ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் கூறும்போது, “இது புலனாய்வு த்ரில்லர் படம் என்றாலும் இதுவரை வந்த படங்களில் இருந்து மாறுபட்டு சவாலான திரைக்கதையாக இருக்கும். நவீன் சந்திரா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ‘லெவன்’ என்கிற தலைப்பு, கதையோடு தொடர்புடையது. அது ஏன் என்பது படம் பார்க்கும்போது புரியும். அபிராமி, திலீபன் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago