சென்னை: மலையாளத்தில் கவனம் ஈர்த்த ‘புழு’ படத்தின் இயக்குநர் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் சவுபின் ஷாயிர். இது தொடர்பாக டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு மம்மூட்டி, பார்வதி மேனன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான படம் ‘புழு’ (Puzhu). சாதிய ஆணவக் கொலையை அழுத்தமாக பேசிய இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்தப் படத்தின் இயக்குநர் ரத்தீனா அடுத்ததாக இயக்கும் படத்துக்கு ‘பதிராத்ரி’ (Pathirathri) என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சவுபின் ஷாயிர், நவ்யா நாயர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சவுபின் ஷாயிரின் ‘எல வீழா பூஞ்சிரா’ படத்தின் இணை எழுத்தாளரான ஷாஜி மாராட் இப்படத்துக்கும் எழுத்தாளராக பணியாறியுள்ளார். சன்னி வெய்ன், ஆன் அகஸ்டின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படத்தின் டைட்டில் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.
காவல் துறை வாகனம் நின்றுகொண்டிருக்கும் வகையில் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. டைட்டிலுக்கு கீழே, ‘ஒரு இரவு, இரண்டு போலீஸ்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. க்ரைம் த்ரில்லர் கதையாக இருக்கும் என தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
10 mins ago
சினிமா
41 mins ago
சினிமா
58 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago