ஹைதராபாத்: “நீங்கள் தான் இந்த தேர்தலின் உண்மையான கேம்சேஞ்சர்” என பவன் கல்யாணுக்கு நடிகர் சிரஞ்சீவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அன்புக்குரிய கல்யாண் பாபு, ஆந்திரப் பிரதேச மக்களின் மகத்தான மற்றும் அருமையான முடிவால் மகிழ்ச்சியடைந்தேன். நீங்கள் தான் இந்தத் தேர்தலின் உண்மையான கேம் சேஞ்சர்.
நீங்கள் தான் மேன் ஆஃப் தி மேட்ச்! ஆந்திர மக்கள் மீது நீங்கள் கொண்டிருந்த ஆழ்ந்த அக்கறை, உங்களின் தொலைநோக்கு பார்வை, மாநிலத்தின் வளர்ச்சி பற்றிய உங்கள் விருப்பம், உங்கள் தியாகங்கள், உங்கள் அரசியல் உத்திகள் ஆகியவை இந்த அற்புதமான தேர்தல் முடிவில் வெளிப்பட்டுள்ளன. உங்களை கண்டு பெருமையடைகிறேன். மனமார்ந்த வாழ்த்துகள்.
உங்களின் நேர்மை, உழைப்பு மற்றும் திறமை மூலம் மாநிலத்தை ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்று, மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
பவன் கல்யாண்: நடிகரும், ஜனசேனா கட்சி நிறுவனருமான பவன் கல்யாண், ஆந்திராவில் உள்ள பிட்டாபுரம் சட்டமன்றத் தொகுதியில் வலுவான முன்னிலையுடன் தனது முதல் தேர்தல் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறார். பவன் கல்யாண் தற்போது வரை 134394 வாக்குகள் பெற்றுள்ளார்.
பவன் கல்யாணை எதிர்த்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வாங்க கீதா விஸ்வநாத் போட்டியிடுகிறார். இவர் பெற்றுள்ள வாக்குகள் 64115. இதன்மூலம் 70279 வாக்குகள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago