இயக்குநராக அறிமுகமாகும் ஜோஜூ ஜார்ஜ் -  ‘பனி’ படத்தின் முதல் தோற்றம் வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் ஜோஜூ ஜார்ஜ் இயக்குநராக அறிமுகமாகும் ‘பனி’ மலையாளப் படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜோஜூ ஜார்ஜ், தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். அவர் இயக்கி நடிக்கும் படத்துக்கு ‘பனி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். இவர்கள் இருவரும் ‘தக் லைஃப்’ படத்தில் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவின் திருச்சூரில் இரண்டு கும்பல்களுக்கு இடையே நடக்கும் போட்டியை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. அபிநயா, சாகர் சூர்யா மற்றும் ஜுனைஸ் வி.பி. ஜிண்டோ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். விஷ்ணு விஜய் மற்றும் சாம் சி.எஸ் படத்துக்கு இசையமைக்கின்றனர்.

முதல் தோற்றத்தில் வித்தியாசமான தோற்றத்துடன் காட்சியளிக்கிறார் ஜோஜூ ஜார்ஜ். அவரது மிரட்டலான லுக் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பான முதல் தோற்ற வீடியோவில், “கண்ணுக்கு கண்” என குறிப்பிடப்பட்டுள்ளது. படம் ஆக்‌ஷன் த்ரில்லருடன் உருவாகியிருப்பதாக தெரிகிறது.

தமிழில் மணிரத்னம் இயக்கி வரும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து வருகிறார் ஜோஜூ ஜார்ஜ். அடுத்து அனுராக் காஷ்யப்பின் புதிய படத்திலும் நடிக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்