சென்னை: மோகன்லாலின் பிறந்த நாளையொட்டி அவர் நடித்து வரும் ‘எம்புரான்’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. மாஸான தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘லூசிஃபர்’. மலையாளத்தைக் கடந்து மற்ற மொழி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இப்படம் தெலுங்கில் ‘காட்ஃபாதர்’ என்ற பெயரில் ரீமேக்கானது. சிரஞ்சீவி, நயன்தாரா நடித்த இப்படத்தை மோகன்ராஜா இயக்கினார். ‘லூசிஃபர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் வெளியாகும் என பிருத்விராஜ் அறிவித்திருந்தார்.
அதன்படி இரண்டாம் பாகத்துக்கு ‘எம்புரான்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளார். முழுக்க முழுக்க பொழுதுபோக்கு சினிமாவாக அதிக பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் பான் இந்தியா முறையில் வெளியாக உள்ளது.
» “நகைச்சுவை நடிகர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்” - சிவகார்த்திகேயன் பகிர்வு
» மிரட்டும் சூரி, ஈர்க்கும் இசை... - ‘கருடன்’ ட்ரெய்லர் எப்படி?
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மோகன்லாலின் பிறந்த நாளையொட்டி படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. கூலிங் க்ளாஸ் அணிந்து, பாடிகார்டுகள் புடைசூழ மாஸாக நடக்கும்படியான தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago