கொச்சி: “எனது ரசிகர்களே என்னுடைய மிகப் பெரிய பலம். 42 ஆண்டுகளாக அவர்கள் என்னை கைவிடவில்லை” என நடிகர் மம்மூட்டி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள ‘டர்போ’ மலையாள படம் வரும் மே 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் புரொமோஷன் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் மம்மூட்டி, “என்னுடைய மிகப் பெரிய பலம் எனது ரசிகர்கள் தான். 42 ஆண்டுகளாக அவர்கள் என்னை கைவிடவில்லை. இதன் பிறகும் அவர்கள் என்னை கைவிடமாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்” என்றார்.
தொடர்ந்து, “டர்போ திரைப்படம் இரண்டு தனி நபர்களின் அனுபவத்தையும், அவர்களின் மோசடியையும் விவரிக்கிறது. இதை நாம் அரிதாகவே கேள்விப்பட்டிருப்போம். ஜோஸ் என்பவர் மாஸ் ஹீரோ இல்லை. அப்பாவியான ஜோஸ் அறியாமல் செய்யும் தவறு தான் படம். பின்விளைவுகளைப் பற்றி அறிந்துகொள்ளாமல் எல்லாவற்றிலும் தலையிடுபவர் தான் ஜோஸ்.
ஒரு சில சூழ்நிலைகளில் ஒருவருக்கு தன்னையறியாமல் ஒரு பலம் கிடைக்கும். ஜோஸூம் அப்படியான ஒரு சக்தியை பெறுவது தான் ‘டர்போ’ திரைப்படம்” என்றார். ‘டர்போ’ படத்தில் மம்மூட்டி ஜோஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
5 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago