‘த்ரிஷ்யம்’ ஜீத்து ஜோசப்புடன் கைகோக்கும் ஃபஹத் ஃபாசில்

By செய்திப்பிரிவு

கொச்சி: ‘த்ரிஷ்யம்’ பட இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கும் புதிய படத்தில் நடிகர் ஃபஹத் ஃபாசில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘த்ரிஷ்யம்’ படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட அந்த மொழிகளிலும் ஹிட்டடித்தது. இதன் இரண்டாம் பாகமும் வெற்றியடைந்தது.

இந்தப் படங்களின் மூலம் பரவலான கவனத்தை ஈர்த்த இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘நேரு’ படமும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் அவர் அடுத்ததாக இயக்கும் படத்தில் ஃபஹத் ஃபாசில் நடிக்கிறார்.

‘த்ரிஷ்யம் 2’, ‘நேரு’ ஆகிய படங்களின் எழுத்தாளரான சாந்தி மாயாதேவி இப்படத்திலும் எழுத்தாளராக பணியாற்றுகிறார். ஈ4 என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

மேலும் ஜீத்து ஜோசப் - ஃபஹத் காம்போ ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆவலை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ஃபஹத் பாசிலின் ‘ஆவேஷம்’ படத்தை ஓடிடி வெளியீட்டுக்குப் பின்பும் ரசிகர்கள் கொண்டாடிவருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்